காலையில் ஏற்படும் தலைவலியை எப்படி சமாளிக்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது இந்த காலை நேர தலைவலியை குணப்படுத்துவதோடு தலைவலி ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறட்டை அல்லது பற்களை கடிக்கும் பிரச்சினை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்.
நீங்கள் வழக்கமாக அதிகமாக காஃபின் உட்கொள்பவராக இருந்தால், காலையில் காஃபின் குடிப்பதைத் தவிர்க்கவும். தலைவலியைத் தவிர்க்க உங்கள் காஃபின் உட்கொள்ளலை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
மனஅழுத்தம் நிச்சயமாக உங்களுக்கு காலை நேர தலைவலியைத் தூண்டும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
சைனஸ்ட்டிஸிஸ் மற்றும் சில அலர்ஜிகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் மற்றும் இது காலை நேர சைனஸ் தலைவலிக்கு வழிவகுக்கும்.
குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் பார்வைக் கோளாறுகள போன்ற பிற தொந்தரவான அறிகுறிகளுடன் நீங்கள் தொடர்ந்து காலை தலைவலியால் அவதிப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவை காலை தலைவலியுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உதவியாக இருக்கும்.