தினமும் எத்தனை கப் காபி பருகலாம்?

தினமும் எத்தனை கப் காபி பருகலாம்?

Published on
ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல.
ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது இது 4 கப் காபிக்கு சமம். என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதிகபட்சமாக 5 கப் காபியுடன் நிறுத்திக்கொள்வதுதான் சரியானது. இந்த அளவுக்குள் பருகுவது பாதுகாப்பானது.
மிதமான அளவு காபி குடிப்பது, இதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கிறது
சில உடல்நல நன்மைகளுடனும் தொடர்புடையது. இந்த வரம்பை மீறுவது எதிர்மறையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகமாக காபி குடிப்பது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, 'அரித்மியா' எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு, துாக்க கலக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தினசரி காபின் வரம்பு வெறும் 45 மில்லி கிராம் மட்டுமே. இது சிறிய துண்டு டார்க் சாக்லேட்டுக்கு சமமான அளவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com