தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க வீட்டுக்குறிப்புகள்!
தோல் வறட்சி நீங்கி பளபளப்புடன், வாசனையுடன் திகழ நலுங்குமா பயன்படுத்த வேண்டும்.
நலுங்குமா தயாரிக்கும் முறை: பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத்தூள், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு இந்த ஏழு பொருட்களையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சோப்பிற்கு பதிலாக நலுங்குமா தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடன் வாசனையுடன் இருக்கும்.
தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.
ஆவாரம் பூ தோல் வறட்சி, வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.
பி.எச் 5.5 அளவுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் தோல் வறட்சி, சொர சொரப்பு இருக்காது.
தேங்காய்ப் பால் அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்த பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும்.
தோல் நல்ல வனப்புடன் இருக்க தேங்காய்ப் பாலில் காய்ச்சிய விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.