முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேம்பாளம்பட்டை எண்ணெய் உதவுகிறது.
பிரிங்கராஜ் மற்றும் கற்றாழை:
வழுக்கை தலையில் முடி வளர, 5 டேபிள்ஸ்பூன் பிரிங்கராஜ் பவுடருடன் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாற்றைக் கலந்து தடவி வர முடி நன்றாக வளரும்.
அஸ்வகந்தா:
ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வதைத் தடுக்க அஸ்வகந்தா ஒரு சிறந்த மூலிகையாக உள்ளது.
கருவேப்பிலை:
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கருவேப்பிலை, தலையில் இறந்த செல்களை அகற்றி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வைட்டமின்கள்:
வைட்டமின் D, முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடியை வளரச் செய்கிறது. வைட்டமின் E ஆக்சிஜனேற்றியாக செயல்பட்டு, முடியை ஃபிரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்:
கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி இழைகளை வலுப்படுத்தும்.