பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி

Published on
செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும்.
இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும். மேலும் பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் பேன்கள் குறையும்.
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை ஒரு மாதகாலம் தொடர்ந்து மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும்.
செம்பருத்தி பூ குளிர்ச்சியானது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும்.
10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள்.
பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நோய் குறையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com