இதனை முந்தைய நாள் இரவே தயார் செய்யலாம். பாலுடன் ஓட்ஸை கலந்து, தேன், பழங்கள் அல்லது நட்ஸ் போட்டு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
இப்போது காலையில் எழுந்ததும் சாப்பிட ஓட்ஸ் தயாராக இருக்கும்.எனவே காலையில் சாப்பாட்டை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
யோகர்ட்
யோகர்ட்டில் பழங்கள், பருப்புகள், விதைகள் அல்லது நட்ஸ்கள் சேர்த்து சில நிமிடங்களிலேயே காலை உணவை தயாரித்து விடலாம். கூடுதல் இனிப்பிற்காக சிறிது தேன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
யோகர்ட்டில் புரதம் மற்றும் புரோபயாடிக் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் பழம் உங்களுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது.
ஸ்மூத்தி
கல்லூரியில் பிசியாக இருக்கும் மாணவர்களுக்கு ஸ்மூத்தி சிறந்த தேர்வாகும்.
பழங்கள், இலைக் கீரைகள், தயிர் அல்லது பால் மற்றும் புரதப்பொடி, சியா விதைகள் அல்லது பருப்புகள் போன்ற புரத மூலங்களை ஒன்றாகக் கலக்கி, ஸ்மூத்தி வடிவில் பருகலாம்.
பழங்கள், பழச்சாறுகள் கலந்து கெட்டியான திரவ உணவு போல ஸ்மூத்தி இருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.
முட்டையுடன் அவகேடோ டோஸ்ட்
முழு தானிய ரொட்டித் துண்டை வறுத்து, பாதி அவகேடோவை மசித்து, அதன் மேல் வறுத்த அல்லது வேகவைத்த முட்டையை சேர்க்கவும். கூடுதல் சுவைக்காக சிறிது உப்பு, மிளகு மற்றும் மிளகாய்த் துண்டுகளை தூவி சாப்பிடலாம்.
அவகேடோவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகளும், முட்டையில் உள்ள புரதமும் இதை ஒரு சீரான மற்றும் நிறைவான காலை உணவாக மாற்றுகிறது.
சியா புட்டிங்
சியா விதைகளை பாலுடன் கலந்து, ஒரு தடிமனான புட்டிங் உருவாக இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில், சுவைக்காக பழங்கள், நட்ஸ்கள் அல்லது கிரீம் வகைகளை அதன் மேல் சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதுவும், சிறப்பான காலை உணவாக மாறும்.