பப்பாளியில் செரிமான நொதிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை இரண்டும் குடலியக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன.
பப்பாளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது குடலியக்கத்தைச் சீராக்க உதவி புரிந்து, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
தோலுடன் சாப்பிட்டால்தான் அதன் முழு நன்மையைப் பெற முடியும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளை உட்கொண்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கிவி
கிவி பழத்தில் உள்ள 'ஆக்டினிடின்' செரிமானத்தை மேம்படுத்துகிறது . கிவி பழத்தின் தோலில், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் மலச்சிக்கலை தடுத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றன.
கிவி பழத்தில் நீர்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இது மலத்தை மென்மை யாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
பேரிக்காய்
பேரிக்காயில் 'சார்பிட்டால்' என்னும் இயற்கை சர்க்கரை உள்ளது. இது மிகச்சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
பேரிக்காயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அதிலுள்ள ’சார்பிட்டால்’ வயிற்று உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
பேரிக்காயில், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலத்தை சிரமமின்றி வெளியேற்ற உதவி புரிகிறது.
கொடிமுந்திரி
'புரூன்ஸ்' எனப்படும் கொடிமுந்திரி பழத்தில் அதிக நார்ச்சத்துடன், சார்பிட்டால் இயற்கை சர்க்கரையும் உள்ளது.
மலச்சிக்கல் உள்ள ஒருவர் தினமும் கொடிமுந்திரி பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ஸ்டிராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்சிடென்டு கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர இந்த பழங்களில் நீர்ச்சத்தும் உள்ளது.
பெர்ரி பழங்களை உணவில் அதிகம் சேர்த்து வரும்போது. மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, குடலியக்கமும் சீராக இருக்கும்.
அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள். அன்றாடம் இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், நாளடைவில் நல்ல பலனைக் காணலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.