காலை முதல் இரவு வரை.. எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது.
ஏனென்றால் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நீண்ட நேரம் கழித்து காலை உணவு உண்பதால் அதை தாமதம் செய்வது கூடாது.
காலை உணவு என்பது காலை 7 முதல் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும்.
மதிய உணவை அதிகபட்சமாக நண்பகல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும்.
இரவு உணவை 8.30 மணிக்குள் உண்பதே சிறந்தது.
இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற்கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும்.
இரவில் மனித உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்பொழுதுமே உணவின் அளவை அவசியம் இல்லாமல் குறைக்கக்கூடாது.
நாம் உண்பதில் ஒருவேளை உணவாவது காய்கறி. பழங்கள், தானியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.