காது குத்துதல் முதல் வராகி நவராத்திரி வரை.. ஜூன் மாத ஆன்மிக முக்கிய தினங்கள்...!
வராகி நவராத்திரி
ஜூன் மாதம் 26-ந்தேதி வராகி நவராத்திரி தொடங்குகிறது. ஜூலை மாதம் 4-ந்தேதி இந்த நவராத்திரியை கொண்டாட வேண்டும்.
9 நாட்களும் தினமும் மாலை அம்பிகையை பூஜை செய்து வழிபட்டால் சலக முன்னேற்றமும் கிடைக்கும்.
கணபதி ஹோமம்
ஜூன் 1, 6 மற்றும் 8-ந்தேதி கணபதி ஹோமம் செய்யலாம். சுதர்சன ஹோமம் மற்றும் தோஷ பரிகார சாந்திகள் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
அமிர்த லட்சுமி விரதம்
ஜூன் 27-ந்தேதி மகாலட்சுமியை வழிபட்டு விரதம் இருப்பதற்கு உகந்த தினமாகும். பெண்கள் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
பராசக்தி பூஜை
ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) தூமாவதீ ஜெயந்தி தினமாகும். அன்றிரவு பராசக்தியை நினைத்து பூஜைகள் செய்தால் அம்பாள் அருள் பெற முடியும். கேது தோஷங்கள் உடனடியாக விலகி சென்று விடும்.
தர்ப்பண தினங்கள்
ஜூன் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜூன் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)- போதன அமாவாசை ஜூன் 25- (புதன்கிழமை)- அமாவாசை
பவுர்ணமி கிரிவலம்
ஜூன் மாதம் 10-ந்தேதி பவுர்ணமி தினமாகும். செவ்வாய்க்கிழமையான அன்று மதியம் 12.27 மணிக்கு பவுர்ணமி தொடங்குகிறது.
மறுநாள் (11-ந்தேதி புதன்கிழமை) மதியம் 1.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரி வலம் செல்வது நன்மை தரும்.
காது குத்துதல்
குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு ஜூன் 6-ந்தேதி உகந்த நாளாகும். காலை 8 மணி முதல் 10 மணிக்குள் காது குத்தலாம். ஜூன் 14-ந்தேதி பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் காது குத்துவது நல்லது.
புது வாகனங்கள் வாங்கி ஓட்ட தொடங்குபவர்கள் ஜூன் 6-ந்தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது.