விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க...
பாதாம் பருப்பு :
ஜிங்க், மெக்னீசியம், பைபர் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளதால் ஆண்மை அதிகரித்து நீண்ட நேர உடலுறவிற்கு வழிவகை செய்கிறது.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
தினமும் பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்கும்.
அக்ரூட் :
அக்ரூட் கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதால் விந்தணுக்களுக்கு உயிரணு சவ்வு உற்பத்தி செய்ய ஆரோக்கியமான கொழுப்பு முதலானவற்றை வழங்குகிறது
வால்நட்டில் உள்ள அர்ஜினைன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பங்களிக்கிறது. அக்ரூட் பருப்புகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகளை அகற்றவும் உதவுகின்றன.
பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட், போன்ற பருப்புகளுடன் பேரீச்சம் பழமும் சேர்த்து தினமும் இரு கையளவு தொடர்ந்து சாப்பிட்டு வர விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆரோக்கியம் மேம்படும்.
வேர்க்கடலை :
வேர்க்கடலையில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தரத்தை உயர்த்தவும் ஜிங்க் சத்து இன்றியமையாததாகும்.
வெங்காயம் மற்றும் பூண்டு :
இவை இரண்டுமே ஆண்மை பெருக்கியாகவும் மற்றும் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுப் பட்டியலில் முக்கியமானதாக உள்ளது.
இவற்றில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நீண்ட நேரம் விரைப்புத் தன்மையுடன் செயல்பட வைக்கிறது.
டார்க் சாக்லேட் :
டார்க் சாக்லேட் என்பது எல்-அர்ஜினைன் எச்.சி.எல் எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வைக் கொண்டுள்ளது.
டார்க் சாக்லேட் விந்து அளவு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் புணர்ச்சியின் தீவிரத்தை மேம்படுத்துகிறது என்றும் அறியப்படுகிறது .
முட்டை :
விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுப் பட்டியலில் முட்டை இன்றியமையாதது.
முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. ஒரு முட்டையில் 6 கிராம் அளவிற்கு புரோட்டீனும் வைட்டமின் இ, ஜிங்க் போன்ற சத்துக்கள் உள்ளன.
தினமும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் விந்தணுக்களின் உற்பத்தியையும், தரத்தையும் அதிகரிக்க முடியும்.
கீரை :
கீரைகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். விந்தணுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
கீரையில் உள்ள ஃபோலிக் அமிலத்தின் அளவு விந்தணுக்களில் உள்ள அசாதாரண விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது.
இதன் மூலம் விந்தணுக்கள் முட்டையில் வெற்றிகரமாக ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த சத்துக்கள் இல்லாவிடில் விந்தணு அதிகம் பாதிக்கப்பட்டு தரமும் குறைந்து காணப்படும்.