தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலை. இது நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கும்.
தோல் பராமரிப்பு
மனித உடல் செல்களின் அழிவை ஏற்படுத்தும் பொருட்களை செல்களில் இருந்து அகற்றி செல்களின் அழிவை தடுப்பவை ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும்.
வைட்டமின்களில் ஏ, சி, ஈ மற்றும் தாதுக்களில் செலினியம், துத்தநாகம், அமினோ அமிலங்களில் குளுட்டத்தயோன், எல் அர்ஜினின் போன்றவை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஆகும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்!
பாதாம், பிஸ்தா, வால்நட், அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள் இவற்றில் செலினியம் சத்து நிறைந்து காணப்படுகிறது
பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, சாக்லெட், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.
கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்திச்சாளை மீன்கள், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் குறைபாடு இல்லாமல் இருக்கும்.
தோலை பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன உளைச்சல், மன அழுத்தம் கூடாது.
தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.