கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
முலாம்பழம்
கோடை காலத்தில் முலாம்பழம் ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு போன்ற எந்த பிரச்சனையும் நமக்கு வராது.
முலாம்பழம்
உடலுக்கு தேவையான நீர் சத்துகளை அளிக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் சூட்டு கட்டி வராமல் இருக்கும்.
இளநீர்
வெயில் காலம் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வருவது இளநீர். இளநீர் என்றால் அதன் சுவையோ தனி அதுபோல் தான் அதில் உள்ள சத்துகளும்.
இளநீர்
நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற சத்துகளை உள்ளடக்கி உள்ளதால் அதனை வெயில் காலத்தில் அருந்துவது நல்லது.
ஸ்ட்ராபெரி
அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. தினமும் உட்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. கெட்ட இரத்தத்தை வெளியேற்றி நல்ல இரத்தத்தை ஊற வைக்கும்.
ஸ்ட்ராபெரி
நல்ல இரத்தம் உடலில் இருப்பதால் வெயில் காலத்தில் வெளியில் செல்லும் பொழுது உடல் வெப்பத்தை தாங்கும் சக்தியை தருகிறது.
வெந்தயம்
கோடைகாலத்தில் தினமும் வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வர தொண்டையில் வறட்சி வராமல் தடுக்கிறது. உடலுக்கு தேவையான நீர் சத்துகளை தருகிறது.
வெந்தயம்
வெந்தயம் மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால் நீர்கடுப்பு சிறுநீர் கோளாறுகள் வராமலும் தடுகிறது.
சிட்ரஸ் பழச்சாறு:
வெயில் காலங்களில் நோய் தொற்றை எதிர்த்து போராட உதவுவது ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை, கிவி, கொய்யா. இந்த மாதிரியான பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
சிட்ரஸ்
சிட்ரஸ் பழம் என்றால் அதில் அதிக அளவு வைட்டமின் சி சத்துகள் நிறைந்தது. அதனால் கோடைகாலங்களில் சிட்ரஸ் பழ ஜூஸ் தினமும் குடித்து வர நீர் சத்துகள் குறையாமல் உடலுக்கு வெயிலை தாங்கக்கூடிய சக்தியை தருகிறது.