புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

Published on
கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பிஸ்பெனால் ஏ என்ற வேதிப் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.
பேக்கான், சாசேஜ் போன்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் அவை கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் பிரிசர்வேட்டிவ்களுடன், நைட்ரேட்கள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும்.
'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.
ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com