சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஜெல்லை பயன்படுத்து முறைகள் குறித்து பார்க்கலாம்.
ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உதவுகிறது.
இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.
ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்
ஆளி விதை ஜெல் முடிகளுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.
உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க
ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் நிறைந்துள்ளது. ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்
ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
நரைமுடியை தடுக்கிறது
ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.