விரைவில் முதல் குழந்தை... மனைவியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த கே.எல். ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
வெற்றி சந்தோஷத்தில் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படத்தை எக்ஸ் பக்கத்தில் Oh, Baby! எனப் பதிவிட்டுள்ளார்.
குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.