பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது.
பெருஞ்சீரகம் சுவாசத்திற்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும்.
பெருஞ்சீரகத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. அவை ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் தாவர அடிப்படையிலான சேர்மங்கள்.
குறிப்பாக மாதவிடாய் கோளாறுகள், வயிறு வீக்கம் மற்றும் மனக்குழப்பத்தை கையாளும் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசி உணர்வை போக்கி முழுதாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைத்து காலப்போக்கில் உடல் எடையை நிர்வகிக்க உதவும்.
அனெத்தோல், பென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் போன்ற ஆவியாகும் எண்ணெய்கள் பெருஞ்சீரகத்தில் உள்ளன.
அவை செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை விரைவுபடுத்துவதற்கும் உதவும்.
வயிறு வீக்கம், வாயு தொல்லையை குறைப்பதற்கு பெருஞ்சீரகம் உதவும். அதிலிருக்கும் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தவும், பிடிப்புகள் மற்றும் வாயு தொந்தரவை குறைக்கவும் உதவும்.
உணவு உட்கொண்ட பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம்.
பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு உகந்ததுதான் என்றாலும் ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும், மருந்து, மாத்திரைகள் உட்கொண்டிருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.