உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள்

உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள்

Published on
காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நம்முடைய பாரம்பரிய உணவு, முழு தானிய உணவு ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் காய்கறி, கீரைகள், பயிறு வகை, மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் உண்பதற்கான காலம் மதிய நேரமே.
இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.
நம்முடைய இந்திய பாரம்பரிய முறைப்படி உணவு பழக்கம் என்பது மூன்று வேலைகளாக காலை, இரவு என அமைந்துள்ளது. அத்துடன் காலை, மதியம் மற்றும் மதியம், இரவு வேலைகளுக்கு இடையில் சிற்றுண்டிகளையும் தேவைக்கு ஏற்ப அளவாக உட்கொள்ளலாம்.
ஒவ்வொரு நேர உணவை உட்கொண்டு முடித்ததும் அடுத்த உணவுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம். எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது.
ஏனென்றால் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் நீண்ட நேரம் கழித்து காலை உணவு உண்பதால் அதை தாமதம் செய்வது கூடாது. அதனால் தான் அதை பிரேக் பாஸ்ட் அதாவது உண்ணா நோன்பை உடைப்பது என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
காலை உணவு என்பது காலை 7 முதல் 9 மணிக்குள்ளாகவும், மதிய உணவை அதிகபட்சமாக நண்பகல் 2 மணிக்குள்ளாகவும், இரவு உணவை 8.30 மணிக்குள்ளாகவும் உண்பதே சிறந்தது.
இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற்கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும்.
இரவில் மனித உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவின் அளவை அவசியம் இல்லாமல் குறைக்கக்கூடாது. நாம் உண்பதில் ஒருவேளை உணவாவது காய்கறி, பழங்கள், தானியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com