தற்போது இந்திய மக்களுக்காகவே பிரத்யேகமாக டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன.
நமதுசமையல் முறைகளுக்கு ஏற்பவும், பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன.
பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால், எண்ணெய் பிசு பிசுப்பு, பாத்திரத்துடன் ஒட்டியிருக்கும் விடாப்பிடியான உணவுகள் வரை எல்லாவற்றையும் சுத்தமாக நீக்கிவிடுகிறது.
எப்படி சுத்தமாக்கும்?
வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும்.
வாஷிங்மெஷினில் பயன்படும் டிடர்ஜெண்ட் பொடி அல்லது திரவங்களை போல பாத்திரங்களை சுத்தமாக்கும் திரவங்கள், மாத்திரை போன்றவற்றை நிரப்பினால், அவை பாத்திரங்களை சுத்தமாக கழுவி கொடுக்கும்.
தண்ணீரை பீய்ச்சி கழுவிக்கொடுப்பதுடன், பாத்திரங்களை 90 சதவிகிதம் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி கொடுக்கும் வேலையையும், டிஷ்வாஷர்கள் செய்கின்றன.
டிஷ்வாஷர் அளவு
6 கிலோ, 7 கிலோ, 8 கிலோ என வாஷிங்மெஷின்களின் துவைக்கும் அளவை குறிப்பதுபோல, டிஷ்வாஷர்களை ‘பிளேஸ் செட்டிங்’ கணக்கில் குறிப்பிடுகிறார்கள்.
8 பிளேஸ் செட்டிங், 13 பிளேஸ் செட்டிங்... என பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பிளேஸ் செட்டிங் கணக்கும் அதிகமாகும்.
உங்களின் குடும்ப தேவைக்கு ஏற்ற பிளேஸ் செட்டிங் டிஷ்வாஷர்களை வாங்குவது நல்லது.
முடிந்தவரை, இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்களை தேர்ந்தெடுங்கள்.