கோழி இறைச்சியைவிட மிகவும் சுவையும், சத்தும் கொண்டது காடை இறைச்சி.
கோழி இறைச்சியை ஒப்பிடும்போது மிகக் குறைவான கொழுப்பு, ஏராளமான உயிர்ச்சத்துகள் காடை இறைச்சியில் உள்ளன.
மூளைக்கு முக்கியமான கோலின் சத்து, வைட்டமின்கள் A, B-1, B, D, K மற்றும் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் உள்பட பல சத்துக்கள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன.
காடை இறைச்சியில் அதிக ஒலிக் அமிலம் இருப்பதால், இதய நோய் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோயாளிகள், காடை இறைச்சியை உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
கண்பார்வை பாதிப்புகளை தடுத்து விழித்திரைகளை மேம்படுத்துகிறது.
காடை இறைச்சியில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் மூட்டு தேய்மானத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
காடை முட்டைகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகின்றன.
உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் ரத்த சோகையை தடுக்கிறது.
காசநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் காடை முட்டையை சிறந்த மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகின்றனர்.
சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை போன்றவற்றில் கற்கள் உருவாவதை காடை முட்டைகள் தடுக்கும் என்று கூறப்படுகிறது.