பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

Published on
பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
உண்மையிலேயே பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்குமா என்பதையும், பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பார்க்கலாம்.
பப்பாளியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை இருப்பதோடு, கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல அதிகமாக உள்ளன.
மற்ற பழங்களை விட ஏராளமான சத்துக்களை பப்பாளி உள்ளடக்கி இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனை ஒரே சமயத்தில் அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்தால் தான், உடல் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
பப்பாளியில் உள்ள ஒருசில ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலினுள் அளவுக்கு அதிகமாகும் போது, அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அப்படியே உடலினுள் தங்கி, உடல் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
பப்பாளியை அன்றாட உணவில் சிறிது எடுத்து வருவதன் மூலம், பாப்பைன் என்னும் செரிமான நொதி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
பப்பாளியை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலில் உள்ள கிருமிகள், குடல் புழுக்கள், வேறு வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.
சமீபத்திய ஆய்வில் பப்பாளி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, உடலை புற்றுநோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பப்பாளி கணையம் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறதாம்.
பழங்களிலேயே பப்பாளி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும் ஓர் சிறந்த பழம்.
இதனை உட்கொள்வதோடு, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், பல சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com