கோடை வெயிலில் குளிர்ந்த பீர் குடிப்பதால் உடல் பாதிக்குமா? அரசு மருத்துவர் விளக்கம்
கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.
பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது.
பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.
குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை.
கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.
எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.