பொதுவாகவே ஒரு சிலருக்கு அடிக்கடி முகத்தில் ஒரு பகுதியான இடது கன்னம் அல்லது வலது கன்னம் துடிப்பது போல் ஒரு உணர்வு தோன்றும்.
இப்படி முகத்தில் ஒரு பகுதி துடிப்பது அல்லது இடிப்பது பொதுவாக தசைப்பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது.
இது கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் குறைபாடுகள், வைட்டமின் D மற்றும் B12 குறைபாடுகள், அல்லது அதிக காஃபின் உட்கொள்ளல் போன்றவற்றால் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் சோர்வு:
முகத்தில் ஏற்படும் துடிப்பிற்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் அதிக சோர்வும் காரணிகளாக பார்க்கப்படுகிறது.
அதிக காஃபின் உட்கொள்ளல்:
காஃபின் அதிகமாக உட்கொள்வதால் தசையில் சுருக்கங்களை தூண்டும் இதனால் முகத்துடிப்பு ஏற்படுகிறது.
மருந்துகளின் ஒவ்வாமை:
உடலில் சில மருந்துகள் ஒவ்வாமை அல்லது தூண்டுதல்களை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே தசை துடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
முக நரம்புகளில் ஏற்படும் அழுத்தம்:
சில சமயங்களில், முக நரம்புகளின் அழுத்தம் காரணமாக துடிப்பு ஏற்படலாம்.
போதுமான ஓய்வு இல்லாமை:
உடலுக்கு போதுமான ஓய்வு இல்லாததால் ஏற்படும் சோர்வு தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:
தசை துடிப்பு தொடர்ந்து நீடித்தாலோ, துடிப்புடன் வலி அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் செய்த பிறகும் தசை துடிப்பு நிற்கவில்லை என்றாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
முகத்தில் ஏற்படும் வலி மற்றும் துடிப்பு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது, அவை சில சமயங்களில் மூளையுடன் தொடர்புடைய தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.