வாரத்தில் ஒருமுறை மட்டும் ஷாம்பு - யாரெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
வாரம் ஒருமுறையோ அடிக்கடி அல்லாமலோ ஷாம்பு உபயோகிப்பது உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை தடுக்கவும் உதவும்.
சில ஷாம்புகளில் முடிகளை உலர்வடையவோ, சேதப்படுத்தவோ செய்யும் சல்பேட்டுகள், பாரபென்கள் உள்ளன. அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது இந்த ரசாயனங்களின் பாதிப்பை குறைக்கும்.
பலவீனமான, அடிக்கடி முடி உதிரும் பிரச்சினை கொண்டவர்கள் அடிக்கடியோ, தினமுமோ ஷாம்பு பயன்படுத்துவது முடியை பலவீனப்படுத்தும்.
எப்போதாவது ஷாம்பு பயன்படுத்துவது வலுவான, ஆரோக்கியமான முடி இழைகளுக்கு வழிவகுக்கும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் வாரம் ஒருமுறை ஷாம்பு பயன்படுத்துவது நல்லதல்ல.
தலைமுடிக்கு பாதிப்பை அதிகரிக்க செய்யும். முடி தடிமன் குறையக்கூடும்.
வாரம் ஒருமுறையோ, எப்போதாவதோ ஷாம்பு பயன்படுத்துவது தலைமுடியில் இறந்த சரும செல்கள், வியர்வை, அழுக்கு படிந்து உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு அல்லது பொடுகுக்கு வழிவகுக்கும்.
சுற்றுப்புற மாசுபாடுகள் தலையில் படிந்து துர்வாசனை வீசக்கூடும். கூந்தலின் பொலிவு குறையும்.