இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

Published on
இரவு நேரங்களில் குறைந்த கார்ப்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் கடினமான உணவுகளை வயிறு முட்ட முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது.
குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் எளிதாக சீரணிக்கும் மேலும் உங்களை லேசாக வைக்கும்.
இரவில் தயிர் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல யோசனையாக இருக்காது. தயிருக்கு பதிலாக நீங்கள் மோர் போன்றவற்றை குடித்து வரலாம்.
தயிர் உங்கள் உடலில் கப தோஷத்தை அதிகரித்து சளித்தொல்லையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் நாசிப் பாதையில் சளியை உண்டாக்கும்.
எப்போதும் அளவோடு சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைக்கப் பயன்படும். எனவே உங்கள் இரவு உணவை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். இது இரவில் தரமான தூக்கத்தை தர உதவி செய்யும்.
இரவில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உங்களுக்கு செரிமான பிரச்சினையை உண்டாக்கலாம். அதிகப்படியான உணவு உங்களுக்கு காலையில் எழும் போது அஜீரணத்தை ஏற்படுத்தும்.
இரவில் அதிகம் புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு, பச்சை காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை இரவில் எடுத்துக் கொண்டால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
இரவில் உங்களுக்கு பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைந்த கொழுப்புள்ள பாலை அருந்துங்கள். இரவு நேரங்களில் குளிர்ந்த பாலை குடிக்க வேண்டாம்.
பாலை குடிப்பதற்கு முன்பு நன்றாக கொதிக்க வைத்து சூடுபடுத்திக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்புள்ள பால் உங்களுக்கு எளிதாக ஜீரணமாக உதவி செய்யும். பாலுடன் சிறுதளவு இஞ்சி மற்றும் ஏலக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றவற்றை நீங்கள் எடுப்பதாக இருந்தால் காரமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காரசாரமான உணவுகள் உங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவி செய்யும். பசியை குறைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவி செய்யும்.
இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் ஏலக்காயை உங்கள் மாலை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இரவு 7 மணிக்கு மேல் உப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உப்பு உடம்பில் நீர் தேக்கத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இரவில் சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com