வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்துள்ளது. கொழுப்பு இல்லை. நார்ச்சத்து, புரதம், வைட்டமின் C, K, பொட்டாசியம் உள்பட ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன.
வெள்ளரிக்காய் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். பசியை போக்கும். இதனை மதியம் மற்றும் இரவு உணவோடு சாலட்டாகவும் சாப்பிடலாம்.
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். கொழுப்பும் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
சாலட்டுகளாகவும் தயாரித்து ருசிக்கலாம். வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டாலும், குறைவான கலோரியே உடலில் சேரும்.
உடல் இயக்கம் தொய்வில்லாமல் நடைபெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமானது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும்போது ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட வேண்டியது முக்கியமானது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு நீர்ச்சத்து கொண்ட காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். அதற்கு வெள்ளரிக்காய் மிகவும் ஏற்றது.
வெள்ளரிக்காய் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இதய நோய்களுக்கான காரணியாக இருக்கும் கொழுப்பை நிர்வகிப்பதற்கு வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து உதவும்.