இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக அதிகமாக சாகுபடி செய்யப்படும் தானியம், சோளம். இது எல்லா வகை மண்ணிலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மைகொண்டது.
இந்திய கிராமங்களில் சோளம் முக்கியமான பாரம்பரிய உணவாக கொண்டாடப்படுகிறது. தமிழக கிராமங்களில் சோள சோறு, சோள தோசை பிரசித்திபெற்றது. வட மாநிலங்களில் சோள ரொட்டி பிரபலமான உணவு.
100 கிராம் சோளத்தில் 70.1 கிராம் மாவுச்சத்து, 127 மி.கி. புரதசத்து, 3.1 மி.கி. கொழுப்பு உள்ளது. பாஸ்பரஸ் 222 மி.கி., கால்சியம் 25 மி.கி. இரும்பு சத்து 4 மி.கி. மற்றும் பொட்டாசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.
இதில் உள்ள பொட்டாசியம் தசைகளை நன்கு சுருங்கி, விரிய உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும். பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாதுக்கள் எலும்புக்கு உறுதியளிக்கும்.
சோளத்தில் புரதச்சத்து அதிகமாக உள்ளது, இது உடலுக்கு உறுதியை அளிக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
சோளத்தில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்களும், உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய தாவர ஊட்டசத்துகளும் அடங்கியுள்ளன.
சோளம் 'ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவு. அதன் மேல் தோலில் மெழுகு போன்ற பொருள் உள்ளது. அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும், கண் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சோளத்தில் ஒவ்வாமையை உருவாக்கக்கூடிய குளுட்டின் இல்லை. அதனால் பசை தன்மை இந்த மாவில் இருக்காது. எளிதில் ஜீரணமாகும்.