இதெல்லாம் தெரிஞ்சாலே போதும் சமையல் செம easy...

இதெல்லாம் தெரிஞ்சாலே போதும் சமையல் செம easy...

Published on
முட்டை வறுவல் செய்யும்போது அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியை நன்றாக கசக்கி தூவி கிளற வேண்டும். அப்போது வாசம் நீங்கிவிடும்.
சோள மாவில் பலகாரம் அல்லது சப்பாத்தி, பூரி செய்யும்போது சிறிதளவு ஓமம் சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.
சமையல் அறையில் ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தால், ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு விட்டால் ஈக்கள் ஓடோடி விடும்.
ரசத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்ப்பதற்கு பதில் கொஞ்சம் முருங்கைக்கீரையை நெய்யில் பொரித்து சேர்த்தால் ரசத்தின் சுவையும், மணமும் கூடுவதோடு சத்தும் அதிகமாகும்.
கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியை சிறிதாக வெட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
தோசை வார்க்கும் முன்பு, கல்லில் கொஞ்சம் பெருங்காயத்தைப் போட்டு, அதன் மீது எண்ணெய் ஊற்றி கல் முழுவதும் தேய்த்து விடுங்கள். பிறகு தோசை வார்த்துப் பாருங்கள். சூப்பராக எடுக்க வருவதுடன், தோசையும் மணக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com