நரம்புகள் தான் நாம் அனுபவிக்கும் வலிக்கு காரணம். இந்த நரம்புகள் அதிக அழுத்தம், அதிக அல்லது குறைந்த உஷ்ணம், திசுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ரசாயணங்கள் இவற்றின் காரணமாக ஏற்படலாம்.
கீழ் இடுப்பு முதல் குதிகால் வரை கால் வலி என்கிறோம். பொதுவில் அடிபடுதல் குறிப்பாக விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகள் வலிக்கு காரணம் ஆகின்றன.
வெளிப்பக்கத்திலுள்ள ரத்த குழாய்கள் பாதிப்பினாலும் வலி ஏற்படலாம். காலுக்கு அதிக உழைப்பு, விளையாட்டு பயிற்சி அதிகம் சுளுக்கு, எலும்பு முறிவு ஆகிய காரணங்களால் வலி ஏற்படலாம்.
நரம்பு பாதிப்பு, ரத்த குழாய் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, எலும்பு பாதிப்பு காரணமாக கால் வலி ஏற்படலாம். சாதாரண கால் வலி சிறிய கவனிப்பிலேயே சரியாகி விடும்.
அதிக ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் காலின் அதிக உழைப்பு காரணமாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
வெளிப்புற நரம்புகள் மூளை, தண்டுவடம் சொல்வதற்கேற்ப இயங்காத பொழுது பாதிப்பு இருக்கும்.
கால்களில் ஒரு குறுகுறுப்பு, சவுகர்யமின்மை போன்ற பாதிப்பு ஏற்படலாம். இதனை கால்களின் அமைதியின்மை என்கிறோம்.
குறிப்பாக படுக்கும் பொழுது இந்த பாதிப்பு அதிகம் தெரிவதால் பாதிப்பு உடையவருக்கு தூக்கமின்மை இருக்கும்.
குறிப்பிட்ட நரம்பில் பாதிப்பு சயாடிகா எனும் தடித்த நரம்பில் பாதிப்பு ஆகிய காரணங்களால் நரம்பு சம்பந்தமான வலி ஏற்படலாம்
மூட்டு வலி ,சதை, தசை நார் இவற்றில் வலி, இரவில் தசை பிடிப்பு ஏற்படலாம். இதற்கு மருத்துவ கவனிப்பு என்று அதிகம் சொல்வதில்லை. சில நிமிடங்களில் தானே சரியாகி விடும்.
ஆனால் உடலில் நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பிற்கு மருத்துவ உதவி அவசியம். தேவையான அளவு நீர் குடிப்பது தீர்வாக அமையும்.