தோசைக்கல் சரியாக சூடாவதற்குள் தோசை ஊற்றுவது பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு. கல் நன்றாக காய்ந்தவுடன் தோசை ஊற்றினால் சூப்பராக வரும்.
தோசை மாவின் தண்ணீர் பதம். மாவு அதிகம் தண்ணியாகவோ அதிகம் கெட்டியாகவோ இருந்தால் தோசை சரியாக வராது.
தொடர்ந்து தோசைகள் சுடும் போது 2-3 மெல்லிய தோசைகள் வார்த்தால் அடுத்தது கொஞ்சம் மொத்தமான தோசை சுட வேண்டும். இதனால் தோசை, கல்லில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்
தோசை சுடுவதற்கு குறைந்தது 15-20 நிமிடங்களுக்கு முன்பு மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைக்க வேண்டும்.
தோசை சுட்டு முடிந்ததும் தோசை கல்லை வெறும் தண்ணீரில் கழுவி வைத்தால் போதும் சோப்பு போட்டு தேய்த்து கழுவுவது வாரம் ஒரு முறை செய்தால் போதும். அப்போதும் ஸ்கிரப் கொண்டு கீறல் விழும் அளவிற்கு அழுத்தி தேய்க்க கூடாது.
தோசைக்கல்லை கழுவிய பின்பு ஈரத்துடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மெல்லியத் துணியால் தோசைக்கல் முழுவதும் தடவி வைத்து விடுங்கள். கொஞ்சம் எண்ணெய் பசை இருந்தால் தான் தோசை நன்றாக வரும்.
தோசை செய்யும் போது இவற்றையெல்லாம் பின்பற்றினாலே போதும் தோசை சூப்பராக வரும் .