மழைக்காலத்தில் சருமம் எண்ணெய் பசையாக மாறும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்க்கும்.
இதனால் முகப்பரு பிரச்சனை ஏற்படும். தோலில் இருந்து துர்நாற்றம் ஏற்படும்.
வாரத்திற்கு ஒருமுறை ஸ்கின் எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு சருமம் தெளிவாகும். முகப்பரு நீங்கும்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். மழைக் காலங்களிலும் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மேட் ஃபினிஷிங் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும்.
மேக்கம் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மழை காலத்தில் மேக்கம் நனைந்தாலும் அதனால் எந்த சரும பாதிப்பும் ஏற்படாது.
மாய்ஸ்சரைசர் சருமத்தை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமம் இருந்தால் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இரண்டு முறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
டோனரை பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால் களிமண் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இது எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துகிறது.