உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா?
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு மாம்பழம் சிறந்தது என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சில நன்மைகளை எடுத்துரைக்கிறார்.
அளவாக உண்ணுங்கள்
அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது. சுவை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அளவில்லாமல் உட்கொள்ள கூடாது.
உணவு கட்டுப்பாடு முக்கியம். எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுத்து எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்த கலோரிகளை சமநிலைப்படுத்துங்கள்
உடல் தானாகவே கொழுப்புகளை அல்லது கலோரிகளை எரிப்பதற்கு முன்னதாகவே நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது.
மாம்பழங்களில் குறைந்த கலோரி அடர்த்தி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இவை இரண்டும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்க உதவும் . ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகை செய்யும்.
நார்ச்சத்தை அதிகம் பயன்படுத்துங்கள்
மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைத் தணித்து, மனநிறைவை ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவும்.
மாம்பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள்
மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை. இருப்பினும், அவற்றின் நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த நன்மையைப் பெற, மாம்பழச் சாற்றைக் குடிப்பதை விட முழு மாம்பழங்களை கடித்து சுவைத்து சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது நார்ச்சத்தை நீக்குகிறது.
ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழம்
மாம்பழங்கள் உட்பட அனைத்து பழங்களும் அவற்றின் வைட்டமின் மற்றும் தாதுப்பொருள் உள்ளடக்கம் காரணமாக ஊட்டச்சத்து நிறைந்தவை.
மாம்பழம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா பரிந்துரைக்கிறார்.