ஆப்பிளில் பெக்டின் நிறைந்துள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டிருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும்.
அதனால் இரவில் சிற்றுண்டி அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்ள உதவும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க அல்லது பசியை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆப்பிள்களில் உள்ளடங்கி இருக்கும் பிரக்டோஸ் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும். பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை விட இரவில் சாப்பிட ஏற்றதாக ஆப்பிள் விளங்கும்.
இரவு சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசமோ, வயிறு வீங்கியோ செரிமானம் மந்தமாக நடப்பதாக உணர்ந்தாலோ, அதன் காரணமாக இரவில் தூக்கம் வருவதற்கு தாமதித்தாலோ ஆப்பிள் சாப்பிடலாம்.
ஏனெனில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
எனினும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது வறுத்த உணவுகளுடன் ஆப்பிளை உட்கொள்ள வேண்டாம்.
தீமைகள்:
சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம்.
அத்தகைய உணர்திறன் மிக்க வயிற்று பிரச்சனை கொண்டவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
விரும்பும் பட்சத்தில் பாதி ஆப்பிள் சாப்பிடலாம். அல்லது ஆப்பிளை வேகவைத்து உட்கொள்ளலாம்.
இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களும் ஆப்பிளை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதனால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடும்.
ஆப்பிளை சாப்பிட்ட உடன் தூங்குவதும் நல்லதல்ல. சிலருக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.