முதலில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் 3 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
EXFOLIATION
இரண்டாவதாக 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து 3-5 நிமிடம் வரை ஸ்கேர்ப் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் கொண்டு கழுவிட வேண்டும்.
MASSAGE CREAM
மூன்றாவதாக 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணையை கலந்து அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு 7 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
FACE PACK
இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், தேன், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையாக தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை 15 நிமிடம் முகத்தில் பூசிய பின் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். தொடர்ச்சியாக இப்படி செய்துவர முகம் தங்கத்தை போல் ஜொலிக்கும்