சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகள், குறைந்த கிளை செமிக் இன்டெக்ஸ் உள்ள பெர்ரி, கிவி போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மாம்பழம் உண்ட பின்னர் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் சற்று தாமதிக்கப்படும்.
மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது. மாம்பழத்தை காலையில் 11 மணிக்கு ஒரு இடைப்பட்ட உணவாகவோ அல்லது மாலை வேளையிலோ சாப்பிடலாம்.
பெரும்பாலும் கார்போஹைட்ரேட் நிறைந்த மதியம் அல்லது இரவு உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்த பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம். மாம்பழங்களை சாப்பிடும்போது கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பாதாமி, அல்போன்சா வகை மாம்பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.