தீப்புண்கள் ஏற்பட்டு விட்டால் அதன் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது.
தீ புண்களை வெறும் கைகளால் தொடுவது துணி வைத்து துடைப்பது ஆகியவையும் கூடாது.
சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் பாதுகாப்பாக சுத்தமான பருத்தித் துணியால் தீக்காயத்தின் மீது படாமல் மூடி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும்.
குளிர்ந்த நீரை தீக்காயம் பட்ட பகுதியில் மீது ஊற்றி அந்த வெப்பம் தோலை பாதிக்காத வகையில் தடுக்கலாம்.
முகம் மற்றும் கண் பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. சுய மருத்துவம் செய்வது என்பது கூடாது.