சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்...
வெல்லத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் முதலான சத்துகள் அதிகமாக உள்ளது. அதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட வெல்லம் சேர்க்கப்படுகிறது.
இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால், இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதன்மூலம் சருமத்தை மேம்படுத்தி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை மேம்ம்படுத்துகிறது.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு உகந்ததாகவும், தொண்டை புண் மற்றும் இருமலை போக்கவும் சளிக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது.
வெல்லத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளதால் இதய செயல்பாட்டை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
வயிறு, உணவுக்குழாய், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை உறுதியாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக வெல்லத்தில் உள்ள நீர் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உணவு அருந்தியபிறகு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது செரிமான நொதிகளை சீராக செயல்படுத்துகிறது. இதனால் உணவானது எளிதில் உடைந்து ஜீரணமாக உதவி புரிகிறது.
இயற்கையாகவே வெல்லத்தில் நச்சுகளை நீக்கும் தன்மை உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.