நாவல் பழம் துவர்ப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை.
நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
நாவல் பழத்தை சாப்பிடுவது ஈறுகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், சோடியம், வைட்டமின் B போன்ற சத்துகள் உள்ளன. குறிப்பாக கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும்.
நாவல் பழத்தில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவி செய்யும்.
இந்தப் பழத்தின் இலைகளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன.
கோடை காலத்தில் உட்கொள்ள வேண்டிய பழங்களில் நாவல் பழம் சிறப்பு இடம் பெறுகிறது.