ராஸ்பெர்ரி பழங்களில் நார்ச்சத்துகள் நிரம்பி உள்ளன. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட பாலிபினால்களும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க செய்யும்.
ராஸ்பெர்ரி இதயநோய்க்கான அபாயத்தை குறைக்கின்றன. ராஸ் பெர்ரிகளில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட தாதுக்களும் நிறைந்துள்ளன. சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதற்கு ஏற்ற பழம் இது.
நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு அதிகம் உள்ளது. நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி கண் சவ்வுகளை சுத்தம் செய்வதன் மூலம் கண் உலர்வில் இருந்து பாதுகாக்கிறது.
நோய்த்தொற்று விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சேதமடைந்த சரும திசுக்களை சரி செய்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடவும் செய்கிறது.