முலாம்பழத்தில் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
உடல் எடை குறையும்:
கிர்ணிப்பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் அதிகளவு பொட்டாசியம் சத்தும் உள்ளது. மேலும் இந்த பழம் நம் உடலால் எளிதில் ஜீரணிக்க கூடிய நல்ல கார்போஹைட்ரேட்டுகள் கொண்டது மற்றும் அதன் விதைகளில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதனால் உடல் எடை குறைக்க முலாம்பழத்தை உண்ணலாம்.
வயிற்றுப்புண்ணை குணமாக்கும்:
கிர்ணி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுப் புண்களை நாளடைவில் சரி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதுகூடவே வயிற்று கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
கண் பார்வைக்கு நல்லது:
கிர்ணி பழத்தில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்து உள்ளது. இது நம் கண்களின் தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
சிறுநீரக கற்கள் குணமாகும்:
முலாம்பழத்தில் உள்ள ஆக்சிகைன் என்ற அமிலம் சிறுநீரகப் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது:
முலாம்பழத்தில் அதிக அளவு ஃபோலேட் உள்ளதால் அதிகப்படியான சோடியத்தை நம் உடலில் இருந்து அகற்ற உதவும். இதனால் கர்ப்பிணி பெண்களின் நீர் பிடிப்பு பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.