தினை என்ற சிறுதானியத்தின் பயன்கள்..

தினை என்ற சிறுதானியத்தின் பயன்கள்..

Published on
தினையை நாம் சிறுதானியம் என்ற வகையில் சேர்க்கிறோம். இதனை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல வகையாக பிரிக்கிறார்கள்.
தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.
தேனும், தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. இது காய்ச்சலைப் போக்குகிறது. பசியை தூண்டி விடுகிறது.
தினை அரிசியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது.
இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், ரத்த சோகையை தடுக்க உதவுகிறது.
தினை அரிசியில் புரதம் உள்ளது. இது உடல் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
தினை அரிசியில் மெக்னீசியம் உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
தினை அரிசியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com