தர்பூசணி 95% தண்ணீரால் ஆனது, இதனால் நீர்ச்சத்துக்கு சிறந்த பழமாக விளங்குகிறது. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் ஏ,வைட்டமின் சி, மக்நீசியம், பொட்டாசியம் மற்றும் பல எலக்ட்ரோலைட்கள் அதிக அளவில் உள்ளது.
ரத்த அழுத்தம்:
தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
தர்பூசணி இதயத்துக்கு நல்லது, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
நீரேற்றம்:
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
செரிமானம்:
தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
சருமம் மற்றும் முடி:
தர்பூசணி சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி:
தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
புற்றுநோய்:
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் புற்றுநோயிலிருந்து காக்கிறது.
குறைந்த கலோரி:
தர்பூசணியில் கலோரி அளவு குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது.