மீன் வகைகளில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சால்மன் மீன் என்று அழைக்கப்படும் கிழாங்கு மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் பல சத்துக்கள் உள்ளன.
சால்மன் மீனில் கால்சியம், புரதம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பொட்டாசியம் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சால்மன் மீன் சாப்பிடுவதால் இதயம், தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
சால்மன் மீனில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பல வகையான நோய்களை குணப்படுத்தும், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலைத் தக்கவைத்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக வயதாகும் போது ஏற்படும் ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்கும்.
கண்களை பாதுகாக்கும்
சால்மன் மீன் கண்களை பாதுகாக்கின்றன. அவை வயதினால் ஏற்படும் மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கின்றன.
மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த
இந்த மீனில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தி கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கும்.
ஆரோக்கியம் மேம்பட
சால்மன் மீன் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
எடையை கட்டுப்படுத்த
சால்மன் மீனின் உயர் புரத உள்ளடக்கம் நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கலாம். இது உங்கள் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்
சால்மனில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. சால்மனில் காணப்படும் அஸ்டாக்சாண்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும், சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவி புரிகின்றன.
உடல் வீக்கத்தை குறைக்க
இதில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. உடல் முழுவதும் உருவாகும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
எலும்பு ஆரோக்கியம் மேம்பட
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவும் சால்மன் மீனில் வைட்டமின் டி அபரிமிதமாக உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக செயல்பட்டு, பலவீனமான எலும்புகளை பாதுகாத்து, வலுவாக்க செய்கின்றன. மேலும் பற்களை பாதுகாக்கின்றன.
புற்றுநோயை தடுக்கும்
இதில் உள்ள வைட்டமின் டி சத்தால், சிலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.