தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்!
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும்.
சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும்.
தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும்.
தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள்.
முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.