பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின் B2, B3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது.
மேலும் இது கலோரி இல்லாத பானமாகவும் விளங்குகிறது. உடல் எடையை சீராக பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவக்கூடியது.
அல்சைமர் நோயை விரட்டும்:
நினைவாற்றல் இழப்பு, சிந்தனை திறன் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் அல்சைமர் நோய் பாதிப்பால் ஏற்படக்கூடும்.
பிளாக் காபி பருகுவது அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கும். தினமும் 2 அல்லது 3 கப் கருப்பு காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம்.
எடை குறைப்புக்கு வித்திடும்
பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
கருப்பு காபியில் உடல் எடையை குறைக்கவும், குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கவும் உதவும் குளோரோஜெனிக் அமிலங்கள் இருக்கின்றன.
புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதையும் கட்டுப்படுத்துகின்றன. ஆதலால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருப்பு காபி சிறந்த தேர்வாக அமையும்.
உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்
ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி பருகுவது சோர்வை விரட்டும்.
உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால் உற்சாகத்தோடும், உடல் வலுவோடும் உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கமும் மேம்படும்.
நீரிழிவு நோயை விரட்டும்
உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
மனநிலையை மேம்படுத்தும்
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்யவும், மனநிலையை அதிகரிக்கவும் ஒரு கப் பிளாக் காபி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனதை விழிப்பு நிலையில் வைத்திருக்கவும் கருப்பு காபி துணைபுரியும். எனவே மனம் தளர்ந்து போகும் சமயத்தில் கருப்பு காபி பருகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
எப்போது காபி குடிக்க வேண்டும்?
காலை அல்லது பகல் பொழுதில் கருப்பு காபி பருகுவது சிறந்தது. இரவில் தூங்கும் முன் கருப்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.