உஷார் மக்களே...உடல் சோர்வு தானே என்று Easy -யா விட்டுடாதீங்க...காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்...
உறக்கமின்மை
ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் தூங்கும் இடத்தில் போதுமான அளவு காற்று இல்லையென்றாலும், தூங்கும் நேரத்தில் மாற்றம், போதிய நேரம் தூங்க முடியவில்லை என்றாலும் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும்.
எனவே, தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களின் இரவு நேர தூக்கம் பற்றி யோசிப்பது அவசியம்.
தைராய்டு
தைராய்டு அறிகுறி தீவிரமாகும் போது உடல் சோர்வும் களைப்பும், உணர்ந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு ஒரு ஹைப்பர் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
தைராய்டு சிகிச்சை எடுத்துகொள்ளும் போதே உடல் சோர்வு இருக்காது.
நீரிழிவு
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பசியும், தாகமும், சிறுநீர் போக்கும் அதிகரிப்பது போல் உடல் சோர்வும் அதிகமாகிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்ற பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம்.
ரத்த சோகை
உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம். ஏனென்றால் ரத்த சோகை இருக்கும் போது உடலில் ரத்தத்தின் அளவு குறையக்கூடும்.
அப்போது உடல் செய்யக்கூடிய வேலைகளில் அதிகப்படியான தொய்வு உண்டாக கூடும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் பெருமளவு வரக்கூடும்.
ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வும் அதீத களைப்பும் இருக்கும். தொடர்ந்து சோர்வோடு காலை எழும் போதே தலைவலியும் இருந்தால் அவை பெரும்பாலும் இந்நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
சிலருக்கு எழுந்தவுடன் தலை பாரமாக இருக்க கூடும். அவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் சென்று நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையின் ரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய வேண்டும்.
காலையில் தூங்கி எழுந்ததும் உண்டாகும் இந்த சோர்வு ரத்த அழுத்தத்தாலும் இருக்கலாம்.
தொடர்ந்து உங்களுக்கு உடல் சோர்வு இருந்தால் 10 நாட்கள் வரை தொடர்ந்து காலையில் எழும் போதெல்லாம் சோர்வை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.