தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் முதுகில் வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் அதிகரித்து தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
உடல் எடை:
ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை இருப்பது முதுகின் தசைகளை சிரமப்படுத்துகிறது.
எண்ணெய் மசாஜ்:
மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது. தசை இறுக்கம், சோர்வு, வலி, இவைகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
சித்த மருத்துவ சிகிச்சைகள்
அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்திரில் சாப்பிட வேண்டும்.
வலியுடன் கூடிய வீக்கத்திற்கு சேராங் கொட்டை நெய் 5-10 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
முதுகு வலி உள்ள இடத்தில், வாதகேசரி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம், கற்பூராதி
தைலம் இவைகளில் ஒன்றைத் தேய்ந்து நொச்சி பழுத்த எருக்கு இலை, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.