பிறந்த நாளுக்கு கேக் வெட்டுபவரா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாடாத நபர்களே இல்லை. பிறந்தநாள் என்பது தனிப்பட்ட நபருக்கான நாள்.
அன்றைய தினம் முழுவதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர்கள், நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடுவதுண்டு.
முன்பெல்லாம் கேக்கை எங்கோ ஒருவர் தான் வெட்டுவார்கள். தற்போது கொண்டாட்டம் என வந்து விட்டாலே கேக் இல்லாமல் அந்த கொண்டாட்டம் நிறைவு பெறாது. அப்படி ஒரு சூழலில் நம்மை திணித்து கொள்கிறோம்.
இருந்தும் டிரெண்டிங் என நினைத்து நாம் கட் செய்யும் கேக்கில் எவ்வளவு தீமைகள் உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 235 புகழ்பெற்ற பேக்கரியில் இருந்து கேக்கை சேகரித்து அதில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் வெளியான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேக்கில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மனித உடலுக்கு ஏற்றவையாக இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேக்கில் செயற்கை வண்ணங்களான அல்லூரா ரெட், சன்செட் எல்லோவ் போன்ற நிறங்கள் பாதுகாப்பு வரம்புகளை மீறி இருக்கின்றன.
இதன் காரணமாகவே ஐரோப்பாவில் இதை தடை செய்துள்ளார்கள். இருந்தபோதிலும் இந்தியாவில் இது நிலுவையில் உள்ளது.
மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பிளாக் ஃபாரஸ்ட், ரெட் வெல்வெட் போன்ற கேக்குகளில் அதிகப்படியான வண்ணங்கள் மற்றும் மலிவான சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான வண்ணங்களை உட்கொள்ளும் போது மூளைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.