குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!
குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது கண்டிப்பாக ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.
குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்கு காரணம். இதைத் தடுக்க, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.
எரிச்சலூட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை தவிர்த்து அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நல்லது.
குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்கு பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைக்கலாம்.
வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளூ போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவிக்கலாம்.இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகுத்தாது.
கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.
விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள். இதனால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.
Gas நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எக்களிக்கச் செய்யும்.
வெயில் காலத்தில் சூட்டை அதிகரிக்க கூடிய சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலாவை முற்றிலும் தவிர்க்கவும்.
வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.
குழந்தைக்கு வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும்.
குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏனென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.