லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்?அப்போ இதை கவனிங்க...!
லிப்ஸ்டிக்
சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் விலையுயர்ந்த உதட்டு சாயங்களை விட தரமான உதட்டு சாயம்தான் உங்களுக்கு அவசியம்.
சில வகை உதட்டு சாயங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உங்கள் உதட்டை கருப்பாக மாற்றவும், விரிசலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஈரப்பதம்
உங்கள் உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும்.
முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள்.
தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாமைக் கூட பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.
லிப்ஸ்டிக்கின் தரம்
ரசாயனம் சார்ந்த உதட்டு சாயங்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இயற்கையான உதட்டு சாயங்களை தேர்ந்தெடுங்கள்.
ரசாயனம் நிறைந்த உதட்டு சாயங்கள் அழற்சியை உண்டாக்கலாம். அவை உதடுகளை சீக்கிரமே கருப்பாக்கி விடும்.
தேன் லிப் pack
உதட்டு சாயங்களை பூசுவதனால் சிலருக்கு உதடுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை தேன் மூலமாகவே குணமாக்கலாம்.
தேனை உதட்டில் வாரத்திற்கு இரண்டு முறை தடவுவதினால், உதடுகளில் உள்ள விரிசலை குணப்படுத்த முடியும்.
தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளில் உள்ள வீக்கம் போன்றவற்றை போக்குகிறது.