பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய ஆஞ்சியோ பரிசோதனை நடத்த இருப்பதாகவும்,அதன்பிறகே அடுத்த கட்ட சிகிச்சைகள் பற்றி தெரிய வரும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது
ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவி சாய்ராபானுவும் பிரிந்து வாழும் நிலையில் அவருடைய தங்கையான பாத்திமா உடல்நலம் குறித்து கூறியதாவது.
தொடர் பயணங்களால் பெரிய களைப்பில் இருந்தார். அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைதான். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும்படி எதுவும் இல்லை என்றார்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்..
ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை நீரிழப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.